தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும்  

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 4 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாற்றம் அடைந்ததால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தேனி மாவட்டத்தில் சில இடங்களிலும் மழை பதிவானது.
அவலாஞ்சியில் 19 செ.மீ., சின்னக்கல்லாரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாளை முதல் ஜூன் 4 வரை, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author