வார விடுமுறை : குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தின், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும், நீர்வரத்து சற்று குறைவாக உள்ளது.

இருந்தபோதிலும், அருவிகளில் குளித்து மகிழ காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஐந்தருவியில் தண்ணீா் வரத்து குறைவாக இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து மகிழ்ந்தனா்.

சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்துவிட்டு, குற்றாலநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இன்று வார விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது.

You May Also Like

More From Author