2024ஆம் ஆண்டில் சீனாவின் விமானச் சேவை மூலம் பயணியரின் பயணங்களின் எண்ணிக்கை 73 கோடியைத் தாண்டியுள்ளது.
சரக்கு மற்றும் அஞ்சல் போக்குவரத்து அளவு 89 இலட்சத்து 82 ஆயிரம் டன்னாகும். அவை கடந்த ஆண்டை விட முறையே 17.9 மற்றும் 22.1 விழுக்காடு அதிகமாகும்.
2024ஆம் ஆண்டில் சர்வதேசச் சேவையில் வாரத்திற்கு 6,400 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது, பெருந்தொற்றுக்கு முன்பு 84 விழுக்காடாக மீட்சியடைந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் பயணி விமான போக்குவரத்து துறை சந்தையை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, செயல்பாட்டின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று சீனப் பயணியர் விமானப் பணியகத்தின் தலைவர் சோங் ஜி யோங் எடுத்துக்கூறினார்.