கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Estimated read time 0 min read

திரு வெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கூத்தாண்டவர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அருகே பெண்ணைவலம் பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த 27ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது.

நாள்தோறும் சுவாமிக்குச் சிறப்புப் பூஜை நடத்தப்பட்ட நிலையில், திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தானியங்களையும், நாணயங்களையும் தேரின் மீது வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

You May Also Like

More From Author