இன்று கார்த்திகை சஷ்டி விரதம்: சகல செல்வங்களையும் பெற முருகப் பெருமானை வழிபடும் முறை…!

Estimated read time 1 min read

முருகன் நினைத்த காரியங்களை நிறைவற்றுவார். தமிழ் கடவுளான முருகனை மனம் உருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

https://youtu.be/XJdpwBbOJQ8?si=MW5bjDuoGBr7rnGj

காரத்திகை மற்றும் மார்கழி மாதங்களில் முருகனுக்கு மாலை அணிந்து, நடைப்பயணமும் மேற்கொள்கின்றனர். அறுபடை வீடுகளில் மட்டுமல்ல சின்ன சின்ன முருகன் கோவில்களும் பக்தர்களிடம் கூட்டம் அலைமோதுகிறது.

அதிலும் இந்த கார்த்திகை மாதம் என்பது அற்புதமான மாதம். கார்த்திகை என்பதே முருகப் பெருமானைக் குறிக்கும் மாதமாகும்.. கார்த்திகை மாதத்து சஷ்டி மிக உன்னதமான நல்லநாள். இந்த நாளில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். அத்துடன் கேட்ட வரங்களைத் தந்திடுவார் முருகன்.

வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்..பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலில் சென்று அங்கேயே தங்கி இருப்பது வழக்கம். அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் நீராடி விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அதுமட்டும் இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என கோரிக்கைகாளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம். நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார் என்பது ஐதீகம்.

விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது. அத்துடன் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம்.

கேட்ட வரங்களைத் தந்திடுவான் கந்தன். வீடு மனை யோகத்தை அளித்திடுவான். செவ்வாய் தோஷத்தை நீக்கிடுவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்திடுவான்.

கவலைகளையெல்லாம் போக்கும் கந்தகுருவை வேண்டுவோம். வேதனைகளையெல்லாம் போக்கியருளுவான் ஞானக்குமரன்.

Please follow and like us:

You May Also Like

More From Author