ஈரானை தாக்கிய இஸ்ரேலுக்கு சீனா கண்டனம்

ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, உரிமை பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை மீறிய இஸ்ரேலுக்கு சீனா கண்டனம் தெரிவித்தது. அனைத்து அசட்டுத்துணிச்சல் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபு சுங் 13ஆம் நாள் தெரிவித்தார்.

பிரதேச நிலைமை மீண்டும் தீவிரமாகியது, எந்த தரப்புகளின் நலனுக்கும் பொருத்தமற்றது. ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய தூதாண்மை பேச்சுவார்த்தையின் மீது தற்போதைய நிலைமை ஏற்படுத்திய பாதிப்பில் சீனா உயர்வாக கவனம் செலுத்துகின்றது.

பேச்சுவார்த்தையின் மூலம் ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு சீனா பாடுபட்டு வருகின்றது. ராணுவ வழிமுறை மற்றும் ஒரே தரப்பு தடை நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சினையைத் தீர்ப்பதை சீனா எதிர்க்கின்றது. அமைதி நோக்கம் கொண்ட அணு ஆற்றல் வசதிகளின் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதையும் சீனா எதிர்க்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author