இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தார்.
  இப்பகுதியில் சீனாவின் ராணுவச் செயல்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படை எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராகவும், நிலைநிறுத்தப்பட்டும் உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
  தற்போது, இந்தியக் கடற்படையின் 40 போர்க்கப்பல்கள் இந்திய பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் எண்ணிக்கையை 50க்கும் மேல் உயர்த்தும் பணியில் இருப்பதாகவும் துணை அட்மிரல் வத்சாயன் தெரிவித்தார்.
சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை
 
                 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                                     
                             
                             
                             
                                
                         
                                                 
                                                 
                                                