பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இடையே, பொதுமக்கள் நடத்திய பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகத் தடைசெய்யப்பட்ட ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’ (JAAC) குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 53 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஜூலை 27 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் சலுகைகளை ரத்து செய்யக்கோரி JAAC அமைப்பு கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி
