ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: ஈரான் மற்றும் ஓமன் இடையே முரண்பாடு  

Estimated read time 0 min read

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை எதிர்காலத்தில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் தங்களுக்குள் புதிய முன்மொழிவுகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
மலாக்கா ஜலசந்தி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, வளைகுடா நாடுகளின் ஆதரவுடன் ஒரு கூட்டு பிராந்திய நிர்வாக அமைப்பை உருவாக்க ஓமன் முன்மொழிந்துள்ளது.
இதன்கீழ் கப்பல்களிடம் கட்டாயக் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக, நாவிகேஷன் மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக விருப்பக் கட்டணத்தைப் பெறப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த முக்கிய நீர் வழியின் மீதான தனி நபர் அல்லது ஒரு நாட்டின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியும் என ஓமன் கருதுகிறது.

You May Also Like

More From Author