பலவீனம் மற்றும் வறுமையிலிருந்து உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடாகிய சீனா சொந்த வளர்ச்சி மூலம் ஆசிய மதிப்பு என்ற கருத்தின் பெரிய உயிராற்றலை நிரூபித்துள்ளது.
வெளிப்புற மேலாதிக்கத்தைச் சார்ந்திருப்பதற்கு மாறாக, உள்புற ஒருங்கிணைப்பு மூலம் வளர்ச்சியடைவதை ஆசிய மதிப்பு வலியுறுத்தியுள்ளது. ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி தருவதை மையமாகவும், பொதுவான பாதுகாப்பைப் பிரதேச வளர்ச்சியின் அடிப்படையாக்கியுள்ளது. மேலும், பல்வேறு நாகரிகங்களின் தனிச்சிறப்பை மதித்து கருத்து வேறுபாடுகளில் ஒத்த கருத்துக்களைக் கண்டதை ஊக்குவித்துள்ளது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஆசிய மதிப்பு கருத்து ஆசிய பொது எதிர்கால சமூகத்தை கட்டியமைப்பதற்கான ஆன்மிக செல்வமாகும். மேலதிக நாடுகள் அமைதி, ஒத்துழைப்பு, திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய இக்கருத்தின் வழிக்காட்டலில் கூட்டு இலக்கை நோக்கிச் செல்கின்றன. சொந்த அமைதி மற்றும் வளர்ச்சியை நனவாக்குவதோடு, மனிதகுலம் மேலும் அருமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஆசியா வழிநடத்தும்.
