பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

Estimated read time 1 min read

ஜி-7 மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டார்.

அப்போது எரிசக்தி பாதுகாப்பு முதல், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் வரை அனைத்து பிரச்னைகளையும் ஒன்றாக சமாளிக்க விரும்புவதாக இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து தெரிவித்த வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, இரு நாட்டு தலைவர்களிடையே மிகவும் ஆக்கப்பூர்வமாக இந்த சந்திப்பு நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பில் இந்தியா – கனடா உறவின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author