ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

ஈரானின் அதிரடி அணு ஆயுத உற்பத்தி மையமாகக் கருதப்படும் பிக்ஆக்ஸ் மலை (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலால் ஏற்படும் கதிரியக்கத்தின் இந்தியா வரை நீளும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பல மாதங்களாக நீடித்துவரும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இருநாடுகளும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில், அமெரிக்க இடைத் தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ஈரான் மீண்டும் தனது அணுசக்தி செறிவூட்டும் திட்டத்தைத் தொடங்கிருப்பதாக இஸ்ரேல் உளவுத் துறை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதால் ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள கார்காஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள Pickaxe மலையைக் குறிவைத்தே தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அதிபர் ட்ரம்பின் ஆலோசகரும் அரசியல் விமர்சகருமான டக்கர் கார்ல்சன் தெரிவித்திருந்தார்.

அம்மலையின் நிலத்தடி சுரங்கங்களைப் பாதுகாக்கும் 300 அடி திடமான கிரானைட் பாறையை” வழக்கமான அமெரிக்க ஆயுதங்களால் ஊடுருவ முடியாது என்பதால், அணு ஆயுதத் தாக்குதல் மட்டுமே ஒரே இராணுவ வழி என்றும் கார்ல்சன் கூறியிருந்தார்.

இஸ்ரேல் தேர்தல் மற்றும் அமெரிக்க இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் அணுஆயுத தாக்குதல் நடத்தினால் ஒவ்வொருவரும் எப்படி தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்? என்பது தொடர்பாக ஒரு புதிய வீடியோவை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவில், அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எப்படி செல்வது? தங்களின் இருப்பிடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் அணுஆயுத பாதுகாப்பு இடம் அமைந்துள்ளது, வெளிப்புறத்தில் இருந்து வரும் காற்றை நிறுத்துவது எப்படி?, கதிர்வீச்சு தொடர்பான மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?? என்பது தொடர்பான விரிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர திறந்த வெளியில் யாராவது சிக்கினால் அவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. அதன்படி அணுகுண்டு வெடிக்கும்போது அதனால் உருவாகும் ஒளியை பார்க்க வேண்டாம். யாராவது வெளியே சிக்கினால் தரையோடு தரையாக படுக்க வேண்டும். பிறகு சிறிது நேரத்தில் அருகே உள்ள கட்டடத்துக்குள் நுழைந்து வெளிப்புற காற்று உள்ளே வராதபடி அறைகளை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈரான் மட்டுமின்றி எகிப்து மற்றும் சவுதி அரேபியாவின் செய்தி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈரானின் ‘பிக்ஆக்ஸ் மலை’, மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப்பட்டால் அணு கதிரியக்க வீழ்ச்சி என்பது ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட வடமேற்குப் பகுதிகள் வரை கூட பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா பிக்காக்ஸ் மலை மீது அணுகுண்டு வீசி அதன் கதிரியக்க மேகத்தை காற்று கிழக்கு நோக்கி எடுத்துச் சென்றால், ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் தான் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் , குறிப்பாக பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அதிக ஆபத்து இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது. மேலும் காற்றின் திசை மற்றும் வேகத்தைப் பொறுத்து, கதிரியக்கத் துகள்கள் வடமேற்கு இந்தியா நோக்கி மேலும் பரவக்கூடும் என்று கூறப் படுகிறது

ஈரான் மீது அமெரிக்கா அணுஆயுத தாக்குதல் நடத்தினால், இது ரஷ்யாவுக்கு உக்ரைன் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author