வெற்றி வீடு கட்டும் திட்டத்தில் 70,000 வீடுகள் கட்ட அனுமதி..! 

Estimated read time 1 min read

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்டு உள்ள அரசாணை:

‘வெற்றி தமிழகம்’ தொலை நோக்கு திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு, 5 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும். முதல் கட்டமாக, 2026 – 27ம் நிதியாண்டில், 70,000 வீடுகள் கட்ட, ‘வெற்றி வீடு திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு வீட்டுக்கு, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். குறைந்தபட்சம், 360 சதுர அடி முதல் அதிகபட்சம், 500 சதுர அடி வரை, சமையல் அறையுடன், வீடுகள் கட்டிக் கொள்ளலாம்.

குடிசை, மண் சுவர், உறுதியற்ற கூரைகளைக் கொண்ட வீடுகளில் வசிப்போருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்கள், பயனாளிகள் வசதிகேற்ப இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். கூடுதல் நிதி தேவைப்படுவோர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வாயிலாக, 50,000 ரூபாய் வரை, 6 சதவீத வட்டியில் கடன் பெறலாம்.கூட்டுறவு அல்லது வணிக வங்கிகள் வாயிலாக, ஒரு லட்சம் வரை வீட்டு கடன் பெறலாம்.

இந்த கடன்களுக்கு, ஆண்டுக்கு, 3 சதவீத வட்டி மானியத்தை, அதிகபட்சமாக, 15 ஆண்டுகள் வரை அரசு வழங்கும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும். துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், 12,000 ரூபாய் செலவில், கழிப்பறை கட்டி தரப்படும்.ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கையில், 5 சதவீதம் மாவட்ட கலெக்டரின் விருப்ப ஒதுக்கீடாக இருக்கும். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியான பயனாளிகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author