பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் கூட இல்லாத போலியான பதிப்பகங்களின் பெயர்களைப் பயன்படுத்தி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்தப் பெரியார் அறிவுலகத்தில் ₹300 மட்டுமே சந்தை மதிப்பு கொண்ட புத்தகம் ஒன்றை ₹1,445 கொடுத்து அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.
அரசுப் பணத்தில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளது புத்தக ஆர்வலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார்.
