திருவண்ணாமலை கோயிலில் நந்தி மீது ஷூவோடு ஏறி நின்று கோபுரம் கழுவிய தீயணைப்பு வீரர்கள்!

Estimated read time 1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வருகிற நவ.15-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாள் விழாவில், 24-ம் தேதி 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக கோயிலின் 9 கோபுரங்களையும் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

Image

நவ.3-ம் தேதி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தலைமையில், திருவண்ணாமலை தீயணைப்பு அலுவலர் பழனிச்சாமி மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி கோபுரங்களை சுத்தம் செய்தனர். அப்போது தீயணைப்பு வாகனத்தில் உள்ள ஏணி, ஹைட்ராலிக் லேடரை பயன்படுத்தாமல், கோயிலில் சுவாமி வீதி உலா வரும் தங்க ரிஷப வாகனத்தை இழுத்து வந்து, அதன் மீது ஷூ, செருப்புடன் ஏறி நின்று தண்ணீர் பீய்ச்சி அடித்துள்ளனர். இதை யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட, பக்தர்கள் கொந்தளித்துவிட்டனர்.

ரிஷப வாகனம் என்பது என்ன? சிவபெருமானின் வாகனம் நந்தி. தர்மத்தின் அடையாளம். அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் தான் திருவிழாவின் 5-ம் நாள் வீதி உலா வருவார். பஞ்சமூர்த்திகள் இந்த வாகனத்தில் எழுந்தருளும் போது தான் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். கோயில் ஆகம விதிப்படி, வாகனங்கள் என்பவை தெய்வத்திற்கு சமம். அவற்றை வெறும் மரச்சாமானாக பயன்படுத்தக்கூடாது. சுத்தமான வஸ்திரம், குளித்து விட்டு தான் தொட வேண்டும். செருப்பு, ஷூவோடு ஏறுவது, அதன் மீது நின்று வேலை செய்வது மகா பாவம், தீட்டு என்று கருதப்படுகிறது.

பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழவே, கோயில் நிர்வாகம் உடனடியாக கோயில் ஊழியர் அசோக் என்பவரை சஸ்பெண்ட் செய்தது. இவர் தான் வாகனத்தை எடுத்து கொடுத்தவர் என கூறப்படுகிறது.தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி கோயில் நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார். அதில், “திருமஞ்சன கோபுரத்தில் புறா எச்சம் பசை போல ஒட்டிக்கொண்டிருந்ததால், கீழே இருந்து சுத்தம் செய்ய முடியவில்லை. எனவே ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று சுத்தம் செய்தது தவறு தான். இனி இது போல் நடக்காது” என குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author