தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Estimated read time 1 min read

தமிழகத்தில் 4 IPS / DCP அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ஜி.சந்தீஷ், சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக டி.என்.ஹரிகிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (Superintendent of Police) நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து DCP-யாக இருந்த கே.முத்துக்குமார், ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்துப் பிரிவுக்கும், டி.ஈஸ்வரன் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சமீபத்தில் சாதிய மோதல்கள், கடலோர கடத்தல், மணல் கொள்ளை பிரச்சனைகளால் பரபரப்பாக உள்ளது. அதனால் Chief Office Reserve-ல் இருந்த ஹரி கிரண் பிரசாத் போன்ற ஆக்டிவ் அதிகாரியை களத்தில் இறக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன. அதே நேரம் G.சந்தீஷ்-க்கு சென்னை போன்ற மெட்ரோ போஸ்டிங் கொடுத்து கௌரவித்துள்ளனர். இந்த 4 மாற்றங்களும் Immediate Effect! அதிகாரிகள் உடனடியாக பொறுப்பேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author