வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை  

Estimated read time 0 min read

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில், சென்னை மணலியில் 6 செ.மீ. அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
பின்னதாக, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 4 செ.மீ. மற்றும் புழல், மணலி புதுநகர், நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது.
இதன் தாக்கமாக மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என கணிக்கப்படுகிறது.

You May Also Like

More From Author