டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

Estimated read time 0 min read

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த பிரவேஷ் வஹி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோஹினி கிழக்கு வார்டிலிருந்து 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக 156 வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஹசி ஸராஃபுக்கு வெறும் 9 வாக்குகளே கிடைத்தன. துணை மேயராக பாஜ.கவை சேர்ந்த மோனிகா பன்ட் தேர்வாகியுள்ளார்.

பாஜகவை சேர்ந்த ஜெய்பகவன் யாதவ், மனீஷ் சத்தா மற்றும் ஆம் ஆத்மியை சேர்ந்த ஜலஜ் சவுத்ரி ஆகியோர் நிலைக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

You May Also Like

More From Author