2024ஆம் ஆண்டு சீனாவின் நீர்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் உலகளவில் 60விழுக்காட்டை வகித்துள்ளது.
கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை 3கோடியே 70லட்சம் டன்னை எட்டி பல ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சீன இயற்கை வள அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தரவின்படி, சீனாவில் 169 தேசிய நிலை கடல் வளர்ப்புப் பண்ணைகள் கட்டியமைக்கப்பட்டன.
அவற்றில் ஆழ்கடல் மற்றும் தொலைத்தூர கடல் வளர்ப்புப் பகுதி 5கோடியே 66லட்சம் கன மீட்டராகும். ஆண்டுக்கான உற்பத்தி 4லட்சத்து 70ஆயிரம் டன்னை எட்டியது.
சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், இணையம், பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தகவல் தொழில்நுட்பங்களைப் பயனப்டுத்தி கடல் மீன் தொழிலின் தகவல்மயமாக்கம், செயற்கை நுண்ணறிவுமயமாக்கம், பசுமைமயமாக்கம் மற்றும் நவீனமயமாக்கத்தின் மேம்பாட்டைச் சீனா முன்னேற்றியுள்ளது.