பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது.
அப்போது வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் ஒரு சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
டிரம்பைத் தவிர, பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுடனும் உயர்மட்ட சந்திப்புகளை நடத்துவார் என்று இந்தியா டுடே செய்தி கூறியது.
ஐ.நா. பொதுச் சபை உச்சி மாநாடு செப்டம்பரில் நியூயார்க் நகரில் நடைபெறும்.
செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் ஒரு வார உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கக்கூடும் என தகவல்
