மே மாதத்தில் தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து, ஜூன் முதல் நாளில் இருந்தே தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்தது. தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.14,500 ஆக இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் ரூ.14,200க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆபரண தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு: சவரன் ரூ.1.13 லட்சத்தை தாண்டியது..!!
Estimated read time
1 min read
இந்நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று (ஜூன் 09) கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.112,560-க்கும், ஒரு கிராம் ரூ.14,070-க்கும் விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.113,600-க்கும், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,200-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
