வந்தவாசி, செப் 24:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகத்தில் நகராட்சி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் இணைந்து தூய்மையே சேவை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளை நூலகர் சி.சேகர் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், நகராட்சி தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் பொன்னம்பலம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வட்ட சட்டப் பணிக் குழு ஆர்வலர் வி.விஜயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொண்டு அனைவரும் புதிய பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் க.வாசு, பி.குமாரவேல், நகராட்சி அனிமேட்டர் ஆனந்தி, சுகன்யா, கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் உள்ளிட்டோர் கருத்துரை நிகழ்த்தினர். மேலும் தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக தூய்மை சேவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் ஓய்வு பெற்ற நூலக உதவியாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.