முன்னாள் மத்திய அமைச்சர் திமுக மூத்த தலைவர் மற்றும் பொருளாளர் டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) இன்று காலமானார்.
கடந்த 8 மாதங்களாக உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முன்னோடிகளுடன் நெருக்கமாக பழகி வந்த ரேணுகாதேவி, கட்சித் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்பு மிக்கவராக இருந்தார். அவரின் மறைவு திமுக வட்டாரங்களில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.