சீனத் தேசிய திரைப்பட நிர்வாகம் ஜூலை முதல் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டின் முற்பாதியில் சீனாவின் திரைப்பட வசூல் 2923.1 கோடி யுவானையும், பார்வையாளர்களின் எண்ணிக்கை 64.1 கோடியையும் எட்டியது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இவை முறையே 22.91 மற்றும் 16.89 விழுக்காடு அதிகரித்துள்ளன. இதில், சீனா தயாரித்த திரைப்படங்களின் வசூல் 91.2 விழுக்காடு வகித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நேஜா-2 என்னும் திரைப்படத்தின் வசூல் 1544.6 கோடி யுவானை எட்டி முதலாவது இடத்தில் உள்ளது.