அசாமில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளையாட்டு வீரர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் இன்று அசாமில் தொடங்கிவைத்தார்.
இன்று தொடங்கிய இந்த போட்டிகள் பிப்ரவரி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 4,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் மொத்தமாக 20 பிரிவு விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் 16 பிரிவு விளையாட்டு போட்டியில் கவுகாத்தியில் நடைபெறுகிறது. மீதமுள்ள 4 பிரிவு போட்டிகள் பிற மாநிலத்தில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து பேசிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், ” நாடு முழுவதிலுமிருந்து 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 4,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சமீப ஆண்டுகளாக இந்தியா விளையாட்டு சக்தியாக உருவெடுத்துள்ளது. அதேபோல் பதக்கங்களை வெல்வதில் வடகிழக்கின் 8 மாநிலங்கள் சிறப்பான பங்களிப்பைக் அளித்து வருகின்றன ” என்று கூறினார்.
இன்று கவுகாத்தியில் உள்ள பல்வேறு மைதானங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி, கூடைப்பந்து, கால்பந்து, நீச்சல் மற்றும் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது.