இந்தியாவின் 23 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி  

புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதல் நாளிலேயே, முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில், தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி, போட்டியின் இரண்டாம் நாளில் 156 ரன்களுக்கு சுருண்டது.
நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author