எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான xAI, அதிநவீன உலக மாதிரிகள் (World Models) மூலம் இயக்கப்படும் ஏஐ வீடியோ கேம் என்ற புதிய லட்சியத் திட்டத்தில் இறங்கியுள்ளது.
இந்தப் புதிய தலைமுறை ஏஐ அமைப்புகள், பாரம்பரிய உரை அல்லது பட உருவாக்கத்திற்கு அப்பாற்பட்டு, பௌதிக உலகின் இயற்பியல் மற்றும் விளைவுக் காரணிகளைப் புரிந்துகொள்ளவும், உருவகப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சி xAI யை மெட்டா மற்றும் கூகுள் போன்ற பெரிய ஏஐ நிறுவனங்களுடன் நேரடிப் போட்டிக்குக் கொண்டு சென்றுள்ளது.
வெளிவந்த தகவல்களின்படி, எலான் மஸ்கின் xAI ஆனது தனது உலக மாதிரி உருவாக்கத்தை விரைவுபடுத்த, என்விடியாவில் இருந்து சிறந்த ஆராய்ச்சியாளர்களைப் பணியமர்த்தியுள்ளது.
2026க்குள் ஏஐ உருவாக்கும் வீடியோ கேம் மாடல்களை வெளியிட எலான் மஸ்க் இலக்கு
