வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையின் மீதான மழைப்பொழிவு தாக்கம் சற்று குறைந்துள்ளது.
எனினும் காலை 10 மணி வரை KTCC பகுதிகளில் பரவலான மழை இருக்கும் என ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதுமே இன்று பரவலான மழை இருக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் ‘Tamilnadu Weatherman’ பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
‘Ditwah’ வலுவிழப்பு: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
