சவரனுக்கு ரூ.240 குறைந்த தங்கம் விலை!

Estimated read time 1 min read

சென்னை : தங்க விலை நேற்று உயர்ந்தாலும், இன்று மீண்டும் குறைந்துள்ளது. நேற்று மட்டும் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.96,560 ஆக இருந்த தங்கம், இன்று காலை சற்று சரிவை கண்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.12,040-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.96,320 என பதிவாகியுள்ளது. கடந்த 8 நாட்களில் பவுனுக்கு ரூ.4,400 உயர்ந்த நிலையில், இன்றைய திடீர் சரிவு நகை சந்தையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு–சரிவு போக்கில் இருந்தது. கடந்த வாரம் முழுவதும் இந்த அதிர்வுகள் இருந்தபோதிலும், வார இறுதியில் ஒரு சவரன் ரூ.95,840-க்கு விற்பனையாகியது. அதன் பின்னர் நேற்று தங்கம் திடீரென ரூ.96,560 வரை ஏறியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று தங்கம் விலை குறைந்ததால் தங்கம் வாங்க நினைக்கும் மக்களிடையே சிறிய நிம்மதி உருவாகியுள்ளது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. நேற்று அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை இன்று நிலைத்திருக்கிறது. கிராம் வெள்ளி ரூ.196-க்கும், பார் வெள்ளி ரூ.1.96 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை உயர்ந்தபின் மாற்றமின்றி நீடிப்பதால், சந்தையில் வாங்குவோரின் செலவும் உயர்ந்தே உள்ளது. இதற்கு முன் வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்திருந்தது. கட்டி வெள்ளியும் கிலோக்கு ரூ.4,000 உயர்ந்து ரூ.1.96 லட்சம் என உயர்ந்த விலையில் தொடர்கிறது. தங்கம் சரிவை கண்ட நிலையில் கூட, வெள்ளி விலை உயர்ந்த நிலையே நீடிப்பது கவனிக்கத்தக்க மாற்றமாக வியாபாரிகள் கருதுகின்றனர்.

தங்கம் விலை மாற்றம் குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தக்குமார் கூறியதாவது: “அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் பலவீனமாவதும், சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதும் தங்க விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள். தங்க விலை இன்று குறைந்திருந்தாலும் இதன் அடிப்படை காரணிகள் மாறாததால், மீண்டும் உயர வாய்ப்பு அதிகம்” எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author