தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மை குழு அமைக்க உத்தரவு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்குமாறு உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பேரிடர்களுக்கு முன்னரும், பின்னரும் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறைச் செயலாளர் சங்கர், அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
இதில், புயல், மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில், கல்வி நிறுவனத்தின் தலைவர் தலைமையில் இந்தக் குழுவை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author