அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ஒற்றுமை அணிவகுப்பு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வதோதரா அருகே உள்ள சாத்லி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், அயாத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்கு முயன்ற ஐவஹர்லால் நேருவின் திட்டம், சர்தார் வல்லபாய் படேலால் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமாக, சர்தார் வல்லபாய் படேல் புகழை நிலைநிறுத்தியதில் பிரதமர் மோடியின் பங்கு முக்கியமானது என குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை படேலின் புகழை யாராலும் அழிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
