அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் செவ்வாய் கிழமை காலை 8:30 மணியளவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதன் கிழமை நண்பகலில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேலும் வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

You May Also Like

More From Author