4ஆவது உலக மகளிர் மாநாட்டின் தலைமைச் செயலாளரும், தான்சானியா நாட்டின் புகழ் பெற்ற பெண் ஆர்வலரான மொங்கெலா அம்மையார் சமீபத்தில் சீன ஊடகக் குழுமத்திற்க்குப் பேட்டியளித்தார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ஐ.நாவின் 4ஆவது உலக மகளிர்
மாநாடு மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக மகளிர் வளர்ச்சியில் சீனா இடைவிடாமல் முயற்சி செய்து வருகிறது என்று அவர் வெகுவாகப் பாராட்டினார்.
மொங்கெலா அம்மையார் கூறுகையில்,
பெய்ஜிங் மாநாட்டில் நிறைவேற்றிய பெய்ஜிங் அறிக்கை மற்றும் செயல் பணித்திட்டம், மனிதக் குலத்தின் வளர்ச்சிக்கு சரியான திசையை வகுத்துள்ளன. தற்போது உலக மகளிர் மாநாடு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அவர்களின் சிந்தனை மற்றும் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, சீன மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம். பெய்ஜிங் அறிக்கை மற்றும் செயல் பணித்திட்டத்தை சீன அரசு மாபெரும் முயற்சியுடன் நடைமுறைப்படுத்தி, அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மகளிர் தகுநிலைக்கு மதிப்பளித்து, மகளிர் நன்மைக்கு உத்தரவாதம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவதால், அவரைப் புகழ்ந்து பாராட்டுகின்றேன் என்றார்.