‘செல்போனில் கிரிக்கெட்’: ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல்

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 14 பயணிகளின் மரணத்திற்கு வழிவகுத்த ஆந்திரா ரயில் விபத்து குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் தான் அப்போது ரயில் விபத்து ஏற்பட்டது.

அந்த பயணிகள் ரயில்களுள் ஒன்றின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர், விபத்து நடந்த போது, தொலைபேசியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அதனால் தான் அந்த விபத்து நிகழ்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று இரவு 7 மணியளவில் ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி என்ற இடத்தில் ராயகடா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம் பலாசா ரயிலை பின்னால் இருந்து மோதியது.

You May Also Like

More From Author