மார்ச் 10ஆம் நாள் முதல் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதலான சுங்க வரியை வசூலிக்க சீனா முடிவு

 

வரும் மார்ச் 10ஆம் நாள் முதல், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது கூடுதலாக சுங்க வரி வசூலிப்பதாக சீன அரசின் சுங்க வரி ஆணையம் 4ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவில் இருந்து கோழி இறைச்சி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய இறக்குமதிப் பொருட்கள் மீது கூடுதலாக 15 சதவீத வரியும், சோளம், சோயா பீன்ஸ், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, நீர்வாழ் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறக்குமதிப் பொருட்களுக்கு தற்போதைய சுங்கி வரி விகிதத்தின் அடிப்படையில் கூடுதலான வரி வசூலிக்கப்படும் என்றும்,சீனப் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீத சுங்க வரி விதிக்க அமெரிக்கா அண்மையில் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, சீனா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பேணிக்காக்கும் வகையிலும், பரவல் தடைகள் உள்ளிட்ட சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் வகையிலும், 15 அமெரிக்க நிறுவனங்களை, சீனாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்துள்ளது என்று சீன வணிகத் துறை அமைச்சகம் 4ஆம் நாள் அறிவித்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author