சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 19) மீண்டும் அதிகரித்துள்ளது.
புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹100 அதிகரித்து ₹11,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹800 அதிகரித்து ₹92,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹109 அதிகரித்து ₹12,546 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹872 அதிகரித்து, ₹1,00,368 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை
