“சென்னையை முடக்கப்போகும் 50 செ.மீ மழை!” – மீண்டும் 2015 பெருவெள்ள பீதி? தனியார் வானிலை நிபுணர் பகீர் எச்சரிக்கை!

Estimated read time 1 min read

தனியார் வானிலை நிபுணர் ஹேமச் சந்தர் கூறியதாவது:-

வடமாநிலங்களில் இன்று வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை இன்றுடன் நிறைவு பெற்றது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி உள்ளது.

தற்போது தமிழகத்துக்குள் குளிர்ந்த காற்று ஊடுருவும் சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக வருகிற 20-ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் ‘எல்நினோ’ உருவானது. இதனால் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யவில்லை. அதன் பிறகு ‘எல்நினோ’, “சூப்பர் எல்நினோ’வாக மாறியது. தற்போது ‘தீவிர எல்நினோ’ வாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு பருவமழைக்கு நேர்மாறாக வடகிழக்கு பருவமழை மிக அதிக அளவில் பெய்யும்.

வட கிழக்கு பருவமழை காலத்தின் போது அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வழக்கமாக

தமிழகத்தில் 44 சதவீதம் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 60 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சுடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும். சென்னை. திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பை விட மழை அதிக அளவில் பெய்யும். அதாவது இயல்பை தாண்டி ஒரே நாளில் 20 செ.மீட்டர் முதல் 24 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் மாதத்தில் சென்னையிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரே நாளில் 40 செ.மீட்டர் முதல் 50 செ.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

You May Also Like

More From Author