ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

Estimated read time 0 min read

ஆசிய விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகள் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது. இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். அப்போது விளையாட்டு வீரர்கள் சார்பில் பிரதமருக்கு சிறப்பு விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.

இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களை சந்திப்பது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக கூறினார். நீண்ட கால காத்திருப்புக்குப் பின் ஹாக்கியில் ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் எனவும் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி, நாட்டின் மனப்பான்மையை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விரும்புவதாக கூறிய பிரதமர், வரவிருக்கும் விளையாட்டு போட்டிகளுக்கான நமது தயார் நிலையை வலுப்படுத்த வேண்டும் எனவும் வீரர், வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தினார்.

You May Also Like

More From Author