பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Estimated read time 0 min read

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பேருந்து நிலையம், ரயில்வே பீடர் சாலை, காந்தி மார்க்கெட், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

பழனி மலைக்கோயில் அடிவாரம் மற்றும் கிரிவலப் பாதையில் இருந்த பக்தர்களும் மழையில் நனைந்தபடியே தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

You May Also Like

More From Author