வெளிநாட்டு ஆக்கிரமிப்பை தொடுக்கும் போது, ஜப்பானின் வலது சாரி சக்தி, “உயிர்வாழும் அபாயகரமான சூழ்நிலை”என்ற கூற்றைப் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில், ஜப்பானின் புதிய தலைமை அமைச்சர் இதை மீண்டும் பயன்படுத்தியுள்ளது, ஜப்பானின் இராணுவ வெறியை வெளிக்காட்டுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டது.
சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம், உலகளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர்களிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதன் முடிவின்படி, இராணுவ வெறி தலை தூக்கும் ஆபத்தான சமிக்கையை இது காட்டுகிறது என்று 88.5 விழுக்காட்டினர் தெரிவித்தனர். ஜப்பான் அரசு, தான் பறைசாற்றிய “அமைதி நாடு”என்பதற்கு எதிராக செயல்பட்டுள்ளது என்று 83 விழுக்காட்டினர் குற்றம் சாட்டினர். வலது சாரி தலைமையிலான ஜப்பான் அரசின் உள்விவகாரங்களும் தூதாண்மையும் வெளியிட்ட செயலற்ற பாதிப்பை அபாயகரமானது என்று 85.9 விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர்.
