7ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றக் கூட்டம் நவம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவெய்சியாங் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கெடுத்து, சீன அரசுத் தலைவரின் வாழ்த்துக் கடிதத்தை வாசித்ததோடு உரை நிகழ்த்தினார்.
சீன-ரஷிய எரியாற்றல் ஒத்துழைப்பு குறித்து அவர் மூன்று முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, தொழில் சங்கிலியின் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, எரியாற்றல் வர்த்தகம் தங்கு தடையின்றி நடைபெறுவதை உத்தரவாதம் செய்ய வேண்டும். இரண்டாவதாக, எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றத்துக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பற்றிய ஒத்துழைப்புகளின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர வேண்டும். மூன்றாவதாக, பலதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, எரியாற்றல் துறையில் உலக ஆட்சிமுறை முன்மொழிவுகளின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றி, உலக எரியாற்றல் சந்தைக்கு மேலதிக நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை ஊட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
