சீன அரசவைத் துணைத் தலைமை அமைச்சர் டிங் சியேன்சியாங் ஜனவரி 21ஆம் நாள் தாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் 4 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவது, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார உலகமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும். இரண்டாவது, உண்மையான பலதரப்புவாதத்தைக் கூட்டாகப் பேணிக்காத்து செயல்படுத்த வேண்டும். மூன்றாவது, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய உந்து ஆற்றலையும் புதிய சாதகங்களையும் கூட்டா உருவாக்க வேண்டும். நான்காவது, காலநிலை மாற்றம், தானியப் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு முதலிய உலகின் கடும் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்றார்.
மேலும், சீனப் பொருளாதாரத்தின் முன்னேற்ற போக்கில் காணப்பட்ட சிறப்புக்களையும் டிங் சியேன்சியாங் அறிமுகப்படுத்தினார்.