மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நன்கோவரிலிருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும், கார் நிகோபாரில் இருந்து (நிகோபார் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. அதுவே இரவு 11 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.
இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியத்துக்குள் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிந்துரைப்படி, ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே மலாக்கா ஜல சந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தற்போது சென்யார் புயல் 2,600 கி.மீ தொலைவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவ.24ஆம் தேதி நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று (நவ.25) காலை 5.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் – இலங்கை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியான நிலையில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும், பிற்பகலில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைம் தெரிவித்துள்ளது.
மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனபதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேற்குப் பகுதியில் உள்ள ரிம்பி கிராமத்தில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 24ஆம் நாள் காலையில் வெள்ளை மாளிக்கையில் சந்தித்துப் பேசினர். [மேலும்…]
சீனாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனமாதல் தடுப்பு மற்றும் காடு வளர்ப்பில் ஈடுபட்ட யின் யுஜென் என்பவருக்கு சகோல்ஸ்கி என்ற அமெரிக்கர் நிதி திரட்டி [மேலும்…]
உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள் காலை, சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-அமெரிக்க தலைவர்கள் அரை ஆண்டுக்குள் பரஸ்பர வருகைகளை மேற்கொண்டது, சீன-அமெரிக்க உறவு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டார். அதோடு, தான் அரசுத் தலைவர் டிரம்புடன் பல்வேறு வழிகளில் தொடர்புகளை நிலைநிறுத்தி, சீன-அமெரிக்க உறவு என்ற இந்தப் பெரும் கப்பலுக்குக் கூட்டாக வழிகாட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், [மேலும்…]
செப்டம்பர் திங்கள் 24ஆம் நாள் காலை, அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் [மேலும்…]
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. [மேலும்…]
லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. விஷ்ணு [மேலும்…]