ஆஸ்திரேலிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு  

Estimated read time 0 min read

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பதவியில் இருக்கும் பிரதமர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இது அல்பானீஸின் வளர்ந்து வரும் அரசியல் அந்தஸ்தையும் அவரது தலைமையின் மீதான வாக்காளர் நம்பிக்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் கணிப்புகள், தொழிலாளர் கட்சி வலுவாகச் செயல்பட்டதாகக் கூறுகின்றன, இருப்பினும் அதிக அளவு வாக்குப்பதிவு காரணமாக இறுதி அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author