பிரதமர் நரேந்திர மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானதாக இந்தியாவும் இங்கிலாந்தும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
இந்த ஒப்பந்தத்தை “வரலாற்று மைல்கல்” என்று அழைத்த பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை விரிவான வியூக கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் என்றும், நமது இரு பொருளாதாரங்களிலும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.
இந்தியாவும் இங்கிலாந்தும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
