2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சீனாவின் நுகர்வோர் விலைக் குறியீடு(CPI) மற்றும் உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை(PPI) சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் ஆகஸ்ட் 9 ஆம் நாள் வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில், நுகர்வுத் தேவை தொடர்ந்து மீட்சி பெற்று கடந்த ஆண்டின் ஜூலையில் இருந்ததை விட அதிகரித்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 0.2விழுக்காடு குறைந்திருந்து, ஜூலை மாதத்தில் 0.5விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த சில ஆண்டுகளில் பதிவானதை விட அதிகமாகும்.
குறைவான சந்தைத் தேவை, சில சர்வதேச பொருட்கள் விலையின் சரிவு முதலிய காரணிகளால், ஜூலை மாதத்தில் சீனாவின் உற்பத்தியாளர் விலைக் குறியீடு கடந்த ஆண்டின் ஜூலையில் இருந்ததை விட, 0.2விழுக்காடு குறைந்துள்ளதோடு, ஜூன் மாத்த்தோடு ஒப்பிடுகையிலும் 0.2விழுக்காடு குறைந்து காணப்படுகின்றது.