நவம்பரில் ஆக்கத் தொழிற்துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு

 

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் சேவை துறை ஆய்வு மையம், சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம் ஆகியவை நவம்பர் 30ம் நாள், சீனாவின் கொள்வனவு மேலாளர் குறியீட்டை வெளியிட்டுள்ளது.

நவம்பரில் ஆக்கத் தொழிற்துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு, 49.2 விழுக்காட்டை எட்டி, கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகம். ஆக்கத் தொழில் அல்லாத வணிக நடவடிக்கைகள் குறியீடு, 49.5 விழுக்காட்டை எட்டி, கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.6 விழுக்காடு குறைவு. மொத்த கொள்வனவு மேலாளர் குறியீடு 49.7 விழுக்காட்டை எட்டி, கொள்வனவு மேலாளர் குறியீட்டை 0.3 விழுக்காடு குறைந்தது. மொத்த கொள்வனவு மேலாளர் குறியீடு என்பது, ஆக்கத் தொழிலின் உற்பத்தி குறியீடு, ஆக்கத் தொழில் அல்லாத வணிக நடவடிக்கைகள் குறியீடு ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. இவ்விரு குறியீடுகள் முறையே 50.0 மற்றும் 49.5 விழுக்காடு ஆகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், சீனாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

 

You May Also Like

More From Author