நவம்பர் 11-ல் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!!! 

Estimated read time 1 min read

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO) எதிராகப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 தொழிற்சங்கங்கள் இணைந்து 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய 9 முக்கியத் தொழிற்சங்கங்கள் இணைந்து தங்களது நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி வேலைநிறுத்தம் தொடர்பான நோட்டீஸை வழங்கியிருந்தன.

அதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பர் 11-ஆம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 12-ஆம் தேதி காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 24 மணி நேரம் மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து அவசர அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதால், பிரச்சனைக்குச் சுமுகத் தீர்வு காண நாளைய தினம் (நவம்பர் 5) காலை 11:30 மணியளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தலைமையில் நடைபெறும் இந்த உயர் மட்டக் கூட்டத்தில், மின் வாரிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் 9 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டால் போராட்டம் கைவிடப்படலாம்; இல்லையெனில் திட்டமிட்டபடி நவம்பர் 11-ல் 24 மணி நேர மின்வாரிய வேலைநிறுத்தம் நடைபெறும் எனத் தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author