அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

Estimated read time 0 min read

அமெரிக்க இடைக்கால தேர்தலில் இரு அவைகளிலும் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதி சபை, செனட் சபைக்கான தேர்தலோடு, ஆளுநர்களுக்கான தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கையில் டிரம்பின் குடியரசுக் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரண்டிலுமே டிரம்ப்பின் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டது.

435 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 242 இடங்களை கைப்பற்றியுள்ளது. செனட் சபைக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி 54 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதேபோன்று பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி 151 இடங்களையும், செனட் சபைக்கான தேர்தலில் 44 இடங்களையும் கைப்பற்றி பின்னடைவை சந்தித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author