இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே வடிவிலான போட்டியில் அதிக சதங்கள் அடித்திருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் அடித்து ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற உலக சாதனையை வைத்திருந்தார்.
இப்போது, விராட் கோலி தனது 52 வது ஒருநாள் சதத்தை பதிவு செய்ததன் மூலம், சச்சினின் சாதனையை முறியடித்து, ஒரு வடிவத்தில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
52வது சதம் அடித்து சச்சினின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி
